உள்ளடக்கத்துக்குச் செல்

திவ்யா பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திவ்யா பிள்ளை
பிறப்பு23 நவம்பர் 1988
துபாய், ஐக்கிய அரபு அமீரகம்[1]
தேசியம்இந்தியர்
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2014–தற்போது வரை
சொந்த ஊர்மாவேலிக்கரை, கேரளா, இந்தியா

திவ்யா பிள்ளை (Divay Pillai) மலையாள படங்களில் தோன்றும் இந்திய திரைப்பட நடிகை ஆவார். அவர் 2015 ஆம் ஆண்டில் வெளியான அயல் என்ஜனல்லா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார், அதைத் தொடர்ந்து 2016 இல் ஓசாம் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

திவ்யா ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்தார். துபாயில் பிறந்து வளர்ந்த இவர், சினிமாவுக்குள் நுழைவதற்கு முன்பு விமானப் போக்குவரத்து நிறுவன ஊழியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[2]

தொழில்

[தொகு]

நடிகர் வினீத் குமார் இயக்குனராக அறிமுகமான காதல் மற்றும் நகைச்சுவையை கதைக்களமாகக் கொண்ட அயல் என்ஜனல்லா என்ற படத்தில் பகத் பாசில் ஜோடியாக 2015 ஆம் ஆண்டில் அறிமுகமானார். அவரது இரண்டாவது திரைப்படம் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த பழிவாங்கும் கதையைக் கொண்ட ஓஷாம் (2016) ஜீது ஜோசப்பின் இயக்கத்தில் வெளிவந்தது. இந்த திரைப்படம் வசூல்ரீதியாக பெரும் வெற்றி பெற்றது.[2][3][4]

திரைப்பட வரலாறு

[தொகு]
வ.எண் ஆண்டு தலைப்பு பங்கு மொழி குறிப்புகள்
1 2015 அயல் என்ஜனல்லா ஹீரா மலையாளம்
2 2016 ஓசாம் காயத்ரி மலையாளம்
3 2017 மாஸ்டர்பீஸ் காவல்துறை அதிகாரி மலையாளம் சிறப்புத் தோற்றம்
4 2019 மை கிரேட் கிராண்டபாதர் டெல்னா மலையாளம்
5 2019 ஜிம்மி ஈ வீடிண்டே ஐஸ்வர்யம் அறிவிக்கப்படவுள்ளது மலையாளம் படப்பிடிப்பில்

குறிப்புகள்

[தொகு]
  1. "നിനച്ചിരിക്കാതെ ദിവ്യയെ തേടി അയാള്‍ ഞാനല്ല എത്തി". www.mathrubhumi.com. Archived from the original on 16 December 2016. பார்க்கப்பட்ட நாள் 1 December 2017.
  2. 2.0 2.1 "ReadMore -'Arc lights caught Divya Pillai unawares…'". Mathrubhumi. Archived from the original on 2016-10-19. பார்க்கப்பட்ட நாள் 2016-10-16.
  3. Sanjith Sidhardhan (2016-02-13). "Divya Pillai in Jeethu Joseph's revenge tale - The Times of India". M.timesofindia.com. பார்க்கப்பட்ட நாள் 2016-10-16.
  4. Sanjith Sidhardhan (2016-08-03). "Prithvi helps Divya Pillai shed her initial inhibitions - The Times of India". M.timesofindia.com. பார்க்கப்பட்ட நாள் 2016-10-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திவ்யா_பிள்ளை&oldid=4176900" இலிருந்து மீள்விக்கப்பட்டது